காதலியின் ஆசையை நிறைவேற்றிய காதலன்!


New Year Greetings


தீப ஒளி - கடவுளும் மனிதனும்


மக்காஆஆஆஆஆ....


ஓமன் நாட்டில் சமஹன் மலைப்பிரதேசத்தில் டெப்பார் மாகாணத்தில் ராணுவ பயிற்சியின் போது ஒரு ராணுவ வீரர் கிளிக்கியது.

மகாத்மாவின் முதல் ஒளிப்படம்

http://yethoonnu.blogspot.com/2007/10/mahatma-gandhis-first-video.html

யூனிகோடு?

யூனிகோடு எழுத்துரு என்பதை ஒருமுக(ப்படுத்தப் பட்ட) எழுத்துரு என்று சொல்லலாமா?

நீ?


எங்கிருக்கிறாய் நீ?
எப்போது வருவாய்?
எப்படி இருப்பாய் நீ?
தெரியவில்லை!

கருவறையில் இருந்தால் கூட
கண்டுகொள்ளலாம்…

உன் சுமையும்,
உன் அசைவும்,
உணர இயலா
படைப்பாய் படைத்துவிட்டான்..

ஒரு சில மணித்துளிகள் மட்டுமே
என்னால் உன்னை உணர இயலும்
அதையும் சிற்றின்பமாய் மட்டுமே
மனம் எண்ணும்.

உன் அன்னைபோல
என்று உன்னை உணர்வேன்?
என் குழவி சுமக்கும்
இன்பத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்ள..

இனி வரும் பிறவியிலாவது
பெண்ணாய் பிறக்க வை..

ஆண்டவனுக்கு புரியுமா
ஆண் மனது!

தீபாவ(லி)ளி!!



தீபாவளி Purchase ஆரம்பிச்சாச்சா!!!

ICICI Bank Duplicate site-be careful

BEWARE OF ICICI DUPLICATE SITE

Sample Spoofed Site



Genuine Site

Hi All,
An important piece of information.
Surprising both the sites have secured SSL from Verisign !!!! beware !!

Dear All, Please be aware of the duplicate ICICI Bank site available in the internet. This is one of the worst phishing scam ever seen. Here are the both the URLs, they are same, except there is a space (%20) at the end of the phishing URL.

The wrong one
https://infinity.icicibank.co.in/BANKAWAY?Action.RetUser.Init.001=Y&AppSignonBankId=ICI&AppType=corporate&abrdPrf=N%20


Actual ICICI Site

தலைக்கவசம்


உனது தலைக்கவசத்திடம்
உன் காதலை சொல்லி வைத்தாயா..!

ஒருநாள் அணிந்து பார்த்ததில்
அத்தனை அன்பையும் சேர்த்து
இறுக்கிக்கொண்டது.

வினாச காலே விபரீத புத்தி !

ஆமோஸ்க்கு பிரபலமாகனும் ஆயிரக்கணக்கான பேர் அவன பார்க்கனும்னு ஆசை.

அதனால விபரீதமா சிந்திச்சி, ஒருநாள் பிரபலமான நடிகர் நடிகைகளுக்கு முன்னால தூக்கு போட முயற்சி பண்ணினான்.

ஆனா இத யாருமே கண்டுக்காம அவன திட்டிட்டாங்க.

உடனே கோவம் வந்து 3 பேர கொலை பண்ணிட்டான் ஆமோஸ்.

பத்திரிக்கைகள் கேமராக்கள் அவன செய்தியாக்க.. சட்டம் அவன பயங்கர கொலகாரன்னு சொல்லி தூக்கு தண்டனை கொடுத்திடுச்சு....

இப்போ ஆமோஸ் பலஆயிரம் பேரு பாக்க தூக்குல தொங்கப்போறான்.

8யதும் 8டாதவையும்

திரு.பிரேம்குமார் அழைப்பிற்கு நன்றி சொல்லிட்டு...

இங்க வந்தவங்களுக்கு வணக்கமுங்க...

என்னைப்பற்றிய 8ம் நான் 8ட்ட வேண்டியவைகளும்..

1. அதாவது 6ம் வகுப்பு படிக்கும் போதே நண்பனுக்காக காதல் தூதும் கவிதை அன்பளிப்பும் அளித்தவன் தான். (பிஞ்சிலே பழுத்த பழம்!). அதற்காக ஆசிரியரிடம் மாட்டியபோது காதலித்தவனை விட்டுவிட்டு என்னை விசாரிக்கும்போது.. (கவிதை உபயம் என்னோடது தானே..) அந்த அண்ணன் தான் என்னோட கையெழுத்தும் கவிதையும் நல்லாயிருக்கும்னு என்னைய எழுத சொன்னார்-னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே கன்னத்தில் கை வைத்த வாத்தியாரை நினைக்கும் போது "உனக்கு ஏண்டா இந்த பொழப்பு"ன்னு தோணினாலும் கவிதை உபயங்களை நான் நிறுத்தவில்லை. காதலுக்காக இது கூட செய்யலீன்னா எப்படி?

2. என்னைப்பற்றி சொல்லும்போது என் நண்பனைப் பற்றியும் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு. வீட்லயும் சரி வெளியிலயும் சரி அமைத்தியான பையன்னு ஒருத்தன் யாருன்னு கேட்டா அது நாந்தான்னு சொல்லி விடலாம்.. ஏன்னா கூச்ச சுபாவம்.. அத மாத்தி ஓரளவுக்கு இப்படி வாயடிக்க சொல்லிக்கொடுத்தது, கொஞ்சம் வாழ்க்கையை விளங்க வைத்தது என் நண்பன் ருத்ரமூர்த்தி தான். இப்போ அவன் இல்லை, ஒரு கரும்பு லாரி வழிதடுமாறிப்போய் சரியாக என் நண்பன் மேல் கவிழ்ந்து மண்ணுக்கு உரமானான்... இருக்கும்போதும் இறந்த போதும் இனிமையானவன்.

3. 2000மாவது ஆண்டு ஒரே ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே பேசியிருப்பேன் அந்த பெண்ணிடம். அதுவும் நான் பணியாற்றிய என் பாலிடெக்னிக் கல்லூரிக்காக ஒரு வருகைப்பதிவு மென்பொருள் வேண்டி விண்ணப்பித்ததோடு சரி. பிறகு அவங்களை பார்க்கவேயில்லை. நியாபகம் கூட இல்லை. 2004லே நான் இந்த சென்னையில் என் முன்னேற்றத்திற்காக வந்தபிறகு 2005லே தான் திரும்ப பார்த்தேன். புரிஞ்சிட்டிருப்பீங்களே... ஆமாம்... எனது காதல் திருமணம்தான்.

4. வேலைல கொஞ்சம் நுணுக்கமான ஆளுதான், சரியா வர்ற வரைக்கும் விடமாட்டேன். கணிணி அலுவலகங்களுக்கு இருக்கை வசதி செய்து தரும் ஒரு தனியார் அலுவலகத்தில் (அட modular furniture company ங்க) படம்போடறதும் படமாபோட்டத கண்முன்னால நிறுத்திக்காட்றதும் (designing & Project division) தான் என் வேலை.

5. என்னோட அப்பாவ நான் love பண்றது இப்பத்தான்.. ஏன்னா கல்யாணத்துக்கு முன்னால நான் கொஞ்சம் குறும்பு, பிடிவாதக்காரன்.. அதனால அவங்க இடித்துரைக்கறது இந்த மன்னனுக்கு ஏறாது. வேற கெடுப்பான் இல்லாமலும் கெட்டுப்போக இருந்த என்னை சரியான சமயத்துல நல்வழிப்படுத்திகிட்டே வந்திருக்கார்.. அத இப்போதான் நான் உணருரேன். அதேபோல பெரியாரை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்கப்பாதான். (இந்த மாதிரி ஒரு அப்பாவா நான் இருப்பேனானு ஒரு கலக்கம் எனக்குள்ள இருக்கு.)

6. தமிழின் பழக்கம் என் அம்மா சொல்லிக்கொடுத்தது. சின்ன வயசில இருந்தே ஆத்திசூடி, நற்றினை, குறுந்தொகை ன்னு நிறைய சொல்லிக்கொடுத்தது அம்மாதான், ஆமா அவங்க எனக்கு தமிழாசிரியை. ஆனா எனக்கு நாட்டம் அகத்தினைகளில் அதிகம் இருந்ததையும் கண்டுபிடித்து ராமாயணம், மகாபாரதம், பாரதியின் கண்ணன் பாட்டுகள்ன்னு சொல்லிகொடுக்கும்போது ஒவ்வொரு பாத்திரங்களையும் மனோதத்துவரீதியா விளக்கி, எனக்கு character watching சொல்லிக்கொடுத்தது அவங்கதான். (அதனால கூட எனக்கு இயக்குனராகனும்னு ஒரு கனவு இருக்குன்னு சொல்லலாம்). ஆனா அவங்க சொன்னதுல ஒன்னே ஒன்னு நான் செய்யாம விட்டது 8ல சொல்றேன்..

7. ஒரே ஒரு முறை தற்கொலை செய்துக்கிற எண்ணம் எனக்கு வந்தது. அப்போ நான் +2 படிச்சி முடிச்சி விடுமுறையில இருக்கேன். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி டிவியில படம் பார்த்துட்டு இருந்தேன்.. அதுல ஜெமினி கணேசன் கமலோட அப்பாவா நடிச்சிருப்பாரு, அவரு ஊருக்கு உழைக்கிற தன்னோட மகன திட்டுவாரு.. ச்சே என்னடா உலகம் இது நல்லது செய்யற இந்த கமலுக்கே இந்த கதின்னா நமக்கு?ன்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல.. ஏன்னா! விளம்பரம் முடிஞ்சி மறுபடியும் படம் போட்டுட்டாங்க.

8. பாட்ஷா படம் வந்தப்ப எங்கம்மா சொன்னாங்க "கண்ணா! அந்த 8டு 8ட்டா மனுச வாழ்வ பிரிச்சிக்கோ"ன்ற பாட்ட நல்லா கவனிச்சு வெச்சிக்கோ.. அதன்படி உன்னோட வாழ்க்கைய plan பண்ணிக்கோ" ன்னு. ஓரளவு தான் பண்ண முடிஞ்சிது.. இத படிக்கிறவங்க யாராவது இப்படி வாழ்ந்துட்டு இருந்தா சொல்லுங்க.. கடைசியா என்ன சொல்றதுன்னா "நேரம்"ன்றது வாழ்ககையில முக்கியம்..

இம்புட்டு நேரம் வெட்டியா எங்கதய கேட்டதுக்கு நீங்க ஏதாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்னு தோணித்துன்னா அது என்னோட வெற்றி!

(அட உண்ம தாங்க நம்மளபத்தியும் எழுத 8 இருக்குதே!)

நன்றி!


நா கூப்பிட நெனைக்கிற 8 பேரு:

1. நிலவு நண்பன். (இன்னும் 8 துளிகளை சொட்டவும்)
2. சந்திரவதனா.
3. ஜீ.ரா.
4. ஆசிப் மீரான்
5. சூரியகுமார்
6. பிரிய(மான) தோழி
7. நவீன் ப்ரகாஷ்
8. செம்மலர் தியாகு




விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

எப்படிச் சொல்ல?

சதா... உன்னைப்பற்றியே
நினக்கும் இந்த மனதிடம்
எப்படிச் சொல்ல....

என்னைப்பற்றியும்
நினை என்று..??

கவி...தா!

என்னை விட்டு
உன்னிடம் வந்த சொற்களை
விடுதலை செய்...

உனக்கான கவிதையை
எழுத வேண்டும்
நான்.

பித்து

அறிந்தே
பித்தனாகி போனேன்...

உன்னிடம்.

வலி!

எப்போதும்
என்னைப் பற்றியே
பேசுகிறாய்...
உனக்கு வாயே வலிக்காதா என்கிறாய்...

காதலைப் பேச
வாய் வலிக்குமா!

மரண-வாழ்த்து..?!

நம் திருமணத்திற்கு வந்த மரணம்
வாழ்த்திச் சென்றது

"நீடூழி வாழ்க" வென்று.

மரணத்தையே திருத்தியது
நம் காதல்.

அது மரணவாழ்த்தல்ல..
மரணத்தின் வாழ்த்து.

குறிப்பு!

நீ தந்த முற்றுப்புள்ளியில் தான்

என் வாழ்க்கையை துவங்கினேன்..

என்ன பார்க்கிறாய்...



கேள்விக் (?) குறியாய் இருந்திருக்கிறேன்

ஆச்சரியக்(!) குறியாய் நிமிர்த்தியிருக்கிறாய்..

தொடர்க் (;) குறியாய் என்ன தருவாயென்றிருந்தேன்...

: க்குறியிட்டு ஏற்கனவே நீ

தந்து சென்றிருக்கிறாய்...

(.) யை

கத சொல்றேன்...

ஒரு இன்ஸூரன்சு ஏஜண்டு ஜோசியகாரங்கிட்ட ஜாதகம் பாக்க போனான், அவரு உனக்கு சாவு நெருங்கிகிட்டிருக்கு எங்கேயும் வெளியே கிளிய போவாதப்பான்னு சொன்னாரு.

அவனும் சாவுக்கு பயந்துட்டு வீட்டுக்குள்ளயே மொடங்கி கெடந்தான். அடடா இந்த வருச டார்கெட்ட முடிக்க முடியாமயே செத்துவனேன்னு பொலம்பிகிட்டே இருந்தான்.

ஒரு நாள் எமதர்மனோட கிங்கரன் அவன் வீட்டுக்குள்ளயே வந்தான்..

இவன் ரொம்ப பயந்து மூஞ்சியெல்லாம் வெளிறிப்போயி நடுங்கிட்டே.. "தயவுசெஞ்சு என்ன கொன்னுடாதீங்க நானு நெறையா சாதிக்கவேண்டியிருக்கு"ன்னான்.
அதுக்கு கிங்கிரன் சிரிச்சிகிட்டே... "அப்பா! உனக்கு சாவு கிடையாது, நீ தாராளமா வெளியில போயி உன்னோட வேலைகள செய்யி"ன்னு சொன்னான்.

இப்போதா அவனுக்கு நம்பிக்கையே வந்து கிங்கிரனுக்கு நன்றி சொல்லீட்டு, தெகிரியமா வெளிய போனான். கொஞ்ச நேரத்தில எதுத்தாப்பல வந்த லாரி, அவமேல மோதிட்டுது... செத்துப்போயிட்டான்.

அப்போ அவனோட உசுர கொண்டுபோகறதுக்கு அதே கிங்கரன் வந்தான், "வாப்பா எமலோகத்துக்கு போகலாம்"ன்னு சொன்னான்.
உடனே செத்தவனோட உசுரு கேட்டுச்சு "நீ சொன்னத நம்பித்தான நா வெளியில வந்தேன். இப்போ பாரு நான் செத்து போயிட்டேன்"னுச்சு.

அதுக்கு கிங்கரன் சொன்னான் "இதப்பாரு உன்ன மாதிரிதான் நாங்களும் இந்த மாச டார்கெட்ட முடிக்கிறதுக்கு ஒரு உசுருதா தேவப்பட்டுது, சாவுக்கு பயந்தவனத்தா புடிக்கணும்னு எமனோட கட்டள அதனால தான் இப்படி சொல்ல வேண்டியதாப்போச்சு, என்னோட டார்கெட்ட அச்சீவ் பண்ணீட்டேன், வா போகலாம்னு" கூட்டிடு போயிட்டான்.

அதனால சாவு எப்டி வேணா வரும், அதுக்கு பயந்துகிட்டு மொடங்கி கெடக்காம.. போயி வேலயப்பாருங்கப்பு...

உதவலாமே...!!!

Dear Friends,

If you know any high school student who is a very high scorer but from a poor family, here is a great opportunity to help him/her get a nice scholarship to enter college. Applications can be obtained by writing to:

Mr.S.Ramanathan
#17,North St,
Kalai Nagar
Madurai - 625014
Ph: 0452-2640678
E-Mail: ramrajam2002@yahoo.com

Scholarships are given by "NORTH SOUTH FOUNDATION" of USA, based on exam grades and family situation. The annual family income should be less than Rs 38000 in urban areas and Rs 26000 in rural areas. The scholarship amount mostly covers 100% of tuition fees and ranges from Rs 5000 to Rs 10000 per year.
If called for an interview, 50% of the travel cost will be reimbursed.
-------------------------------------------------------------------------------------
இந்த தகவல் எனக்கு வந்த ஈ-மெயிலில் இருந்து பதிவு செய்தது.
-------------------------------------------------------------------------------------

அலை


என்னை நோக்கிவந்த அலைகளில்

இந்தச் சமூகம் -
என்னை உள்ளிழுத்த அலை.

நீ -
என்னை கரையேற்றிய அலை.

ஏ...பணமே..!

நீ!
ஏழைகளின்
எஜமானன்,

முதலாளிகளின்
கொத்தடிமை.

உந்துதல்

உனக்கு
இரத்த அழுத்தமாம்
வைத்தியர் சொன்னார்.

எனக்குத் தெரியும்...
நம் வாழ்க்கைப் படகு
முன்னேறிச் செல்ல
நீ கொடுக்கும்
துடுப்பின் அழுத்தம்தான்
அதுவென்று.

ஈர்ப்பு

காந்தம் போல்
ஒட்டிக்கொள்வாய் என
நினைத்தேன்...

நீயோ

இன்னோரு துருவமாய்
விலகியே நிற்கிறாய்.



பொருத்தம்

உனக்கும் எனக்கும்
பொருத்தமாய் இருக்குமா
என்று கேட்டாய் அன்று.

கேள்!
இன்று
உலகம் சொல்கிறது
நாமிருவரும்
மிகப்பொருத்தமான
தம்பதிகளென்று.

கண்ணீர் துளிகள்..

கண்ணீர் துளிகள்
விஷேசமானது தான்.

புன்னகையை யாருக்கும் அளிக்கலாம்..
கண்ணீர்த்துளிகளை
அன்பானவர்க்கு மட்டுமே
உதிர்க்க முடியும்.

உன் மணத்திற்காய்
இன்று நானும்.

என் மரணத்திற்காய்
நாளை நீயும்.

காதல் பிரசவம்

நம் நெஞ்சமெனும் கருவரைக்குள்
வைத்து பிரசவித்தோம்
காதலெனும் குழந்தையை.

காதல் எதிரிகள்..

------------------------------------
காதலர் தின மறுபதிவு
-----------------------------------

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

இவன்..

எழுத்துப் பட்டறைகளின்
உளிகளால்
செதுக்கப்பட்டவனல்ல இவன்...
காலம் காலமாய் கருங்கல்லாயிருந்து
உன் காற்றுக் கைகளால்
மெருகேறியவன்.

கவிதை!!

உன்னைப்பற்றிய
கவிதைகள் எல்லாம்
வார்த்தைகளால் ஆனது.
நீ மட்டுமே கவிதையானவள்...
ஆகவே
இப்பொழுதெல்லாம் நான்
கவிதைகள் எழுதுவதில்லை..
உன்னை
படித்து
ரசிக்க மட்டுமே செய்கிறேன்,
நீ
என்
மனைவியானதால்.

கவிதை?

இப்போதெல்லாம்
நான் கவிதை எழுதுவதே இல்லை..
நீ
என்
மனைவியாகிவிட்டாயல்லவா..!!