தவிப்பு

வளைகாப்பு முடிந்ததும்
பிள்ளைபேறுக்கு
தாய்வீடு சென்றுவிட்டாய் நீ..

விட்டுச்சென்ற
வளையல்களுக்குள்
உறங்குகிறேன் நான்.

ஆதங்கம்..

நிறைய தானுந்துகளில் எழுதப்பட்டிருக்கிறது...
ஒரு மருத்துவமனையில் கூட எழுதப்படவில்லை...
"பிரசவத்திற்கு இலவசம்" என்று.