இவன்..

எழுத்துப் பட்டறைகளின்
உளிகளால்
செதுக்கப்பட்டவனல்ல இவன்...
காலம் காலமாய் கருங்கல்லாயிருந்து
உன் காற்றுக் கைகளால்
மெருகேறியவன்.

கவிதை!!

உன்னைப்பற்றிய
கவிதைகள் எல்லாம்
வார்த்தைகளால் ஆனது.
நீ மட்டுமே கவிதையானவள்...
ஆகவே
இப்பொழுதெல்லாம் நான்
கவிதைகள் எழுதுவதில்லை..
உன்னை
படித்து
ரசிக்க மட்டுமே செய்கிறேன்,
நீ
என்
மனைவியானதால்.

கவிதை?

இப்போதெல்லாம்
நான் கவிதை எழுதுவதே இல்லை..
நீ
என்
மனைவியாகிவிட்டாயல்லவா..!!