தவிப்பு

வளைகாப்பு முடிந்ததும்
பிள்ளைபேறுக்கு
தாய்வீடு சென்றுவிட்டாய் நீ..

விட்டுச்சென்ற
வளையல்களுக்குள்
உறங்குகிறேன் நான்.