அலை


என்னை நோக்கிவந்த அலைகளில்

இந்தச் சமூகம் -
என்னை உள்ளிழுத்த அலை.

நீ -
என்னை கரையேற்றிய அலை.

4 மறுமொழிகள்:

Manivannan said...

கரை ஏறிய நண்பனே

நில்.

சமூகம் என்பது நாலு பேர் !!

என்பதை மறந்துவிடாதே.

- மணிவண்னன்

கவிப்ரியன் said...

நன்றி நண்பரே,
இருப்பினும் எல்லா அலைகளும் உள்ளிழுப்பவை அல்லவே..
சில அலைகள் வந்து தொட்டுவிட்டு செல்கின்றன.. பாதிப்புகளை உருவாக்குவதில்லை..
வேடிக்கை பார்க்க மட்டுமே செய்கின்றன.
நான் மிகமோசமாக அலைக்கலைக்கப்பட்டு என்னை பாதித்த அலைகளை மட்டுமே குறிப்பிடுகின்றேன்.

வருகை தந்தமைக்கு நன்றிகள்.

Chandravathanaa said...

சின்னச் சின்னக் கவிதைகள் ஒவ்வொன்றையும் படித்தேன்.
பொருள் பெரிதாயிருந்தது. வாழ்த்துக்கள்

கவிப்ரியன் said...

நான் விதைகளை மட்டுமே விதைப்பவன்.
அறுவடைக்கு காத்திருப்பதில்லை.
ஆகவே கருத்துக்களை புதைத்து வைப்பேன் கவிதைகளில்.
நன்றி சந்திரவதனா..