நீ?


எங்கிருக்கிறாய் நீ?
எப்போது வருவாய்?
எப்படி இருப்பாய் நீ?
தெரியவில்லை!

கருவறையில் இருந்தால் கூட
கண்டுகொள்ளலாம்…

உன் சுமையும்,
உன் அசைவும்,
உணர இயலா
படைப்பாய் படைத்துவிட்டான்..

ஒரு சில மணித்துளிகள் மட்டுமே
என்னால் உன்னை உணர இயலும்
அதையும் சிற்றின்பமாய் மட்டுமே
மனம் எண்ணும்.

உன் அன்னைபோல
என்று உன்னை உணர்வேன்?
என் குழவி சுமக்கும்
இன்பத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்ள..

இனி வரும் பிறவியிலாவது
பெண்ணாய் பிறக்க வை..

ஆண்டவனுக்கு புரியுமா
ஆண் மனது!

0 மறுமொழிகள்: