ஏ...பணமே..!

நீ!
ஏழைகளின்
எஜமானன்,

முதலாளிகளின்
கொத்தடிமை.

உந்துதல்

உனக்கு
இரத்த அழுத்தமாம்
வைத்தியர் சொன்னார்.

எனக்குத் தெரியும்...
நம் வாழ்க்கைப் படகு
முன்னேறிச் செல்ல
நீ கொடுக்கும்
துடுப்பின் அழுத்தம்தான்
அதுவென்று.

ஈர்ப்பு

காந்தம் போல்
ஒட்டிக்கொள்வாய் என
நினைத்தேன்...

நீயோ

இன்னோரு துருவமாய்
விலகியே நிற்கிறாய்.



பொருத்தம்

உனக்கும் எனக்கும்
பொருத்தமாய் இருக்குமா
என்று கேட்டாய் அன்று.

கேள்!
இன்று
உலகம் சொல்கிறது
நாமிருவரும்
மிகப்பொருத்தமான
தம்பதிகளென்று.