(தேன்கூடு போட்டிக்கவிதை)
-------------------------------------
அவனைக் காண வேண்டும்.
சே.. என்ன இரவு,
நீண்ட இரவாக உள்ளதே!
அடடா!
பொழுது விடியும்போது
எல்லோரும்
காணத் துடிக்கும் அவனை
அந்த இளஞ்சூரியனை
நான் காண வேண்டும்.
நினைக்கும் போதே இதமாயிருந்தது.
தூங்கிவிட்டேன்.
காலை வந்துவிட்டதாம்.
சேவல் கூவியதும் எழுந்தேன்.
தட்டுத் தடுமாறி
அவனது அழகிய முகத்தில் விழிக்க
கண்களை மூடிக்கொண்டு சென்றேன்.
வெளியே வந்துவிட்டது போல் உணர்வு.
தலையை நிமிர்த்தி
கண்களை அகலத்திறந்தேன்.
ஒன்றுமே தெரியவில்லை.
எல்லாமே இருள்.
ஞாபகம் வந்தது..
நான் குருடன் என்று.
2 மறுமொழிகள்:
அப்பப்பா அருமையான கற்பனை!
இன்னும் கொஞ்சம் பெருசாக்கி கடைசில ட்விஸ்ட் கொடுத்திருந்தா என்பதை சொல்லி இருந்திருந்தா ஒரு அழுத்தம் கிடத்திருக்கும்.
Post a Comment