காதல் பிரசவம்

நம் நெஞ்சமெனும் கருவரைக்குள்
வைத்து பிரசவித்தோம்
காதலெனும் குழந்தையை.

காதல் எதிரிகள்..

------------------------------------
காதலர் தின மறுபதிவு
-----------------------------------

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

இவன்..

எழுத்துப் பட்டறைகளின்
உளிகளால்
செதுக்கப்பட்டவனல்ல இவன்...
காலம் காலமாய் கருங்கல்லாயிருந்து
உன் காற்றுக் கைகளால்
மெருகேறியவன்.

கவிதை!!

உன்னைப்பற்றிய
கவிதைகள் எல்லாம்
வார்த்தைகளால் ஆனது.
நீ மட்டுமே கவிதையானவள்...
ஆகவே
இப்பொழுதெல்லாம் நான்
கவிதைகள் எழுதுவதில்லை..
உன்னை
படித்து
ரசிக்க மட்டுமே செய்கிறேன்,
நீ
என்
மனைவியானதால்.

கவிதை?

இப்போதெல்லாம்
நான் கவிதை எழுதுவதே இல்லை..
நீ
என்
மனைவியாகிவிட்டாயல்லவா..!!