8யதும் 8டாதவையும்

திரு.பிரேம்குமார் அழைப்பிற்கு நன்றி சொல்லிட்டு...

இங்க வந்தவங்களுக்கு வணக்கமுங்க...

என்னைப்பற்றிய 8ம் நான் 8ட்ட வேண்டியவைகளும்..

1. அதாவது 6ம் வகுப்பு படிக்கும் போதே நண்பனுக்காக காதல் தூதும் கவிதை அன்பளிப்பும் அளித்தவன் தான். (பிஞ்சிலே பழுத்த பழம்!). அதற்காக ஆசிரியரிடம் மாட்டியபோது காதலித்தவனை விட்டுவிட்டு என்னை விசாரிக்கும்போது.. (கவிதை உபயம் என்னோடது தானே..) அந்த அண்ணன் தான் என்னோட கையெழுத்தும் கவிதையும் நல்லாயிருக்கும்னு என்னைய எழுத சொன்னார்-னு சொல்லி முடிக்கிறதுக்குள்ளே கன்னத்தில் கை வைத்த வாத்தியாரை நினைக்கும் போது "உனக்கு ஏண்டா இந்த பொழப்பு"ன்னு தோணினாலும் கவிதை உபயங்களை நான் நிறுத்தவில்லை. காதலுக்காக இது கூட செய்யலீன்னா எப்படி?

2. என்னைப்பற்றி சொல்லும்போது என் நண்பனைப் பற்றியும் சொல்லவேண்டிய கட்டாயம் இருக்கு. வீட்லயும் சரி வெளியிலயும் சரி அமைத்தியான பையன்னு ஒருத்தன் யாருன்னு கேட்டா அது நாந்தான்னு சொல்லி விடலாம்.. ஏன்னா கூச்ச சுபாவம்.. அத மாத்தி ஓரளவுக்கு இப்படி வாயடிக்க சொல்லிக்கொடுத்தது, கொஞ்சம் வாழ்க்கையை விளங்க வைத்தது என் நண்பன் ருத்ரமூர்த்தி தான். இப்போ அவன் இல்லை, ஒரு கரும்பு லாரி வழிதடுமாறிப்போய் சரியாக என் நண்பன் மேல் கவிழ்ந்து மண்ணுக்கு உரமானான்... இருக்கும்போதும் இறந்த போதும் இனிமையானவன்.

3. 2000மாவது ஆண்டு ஒரே ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே பேசியிருப்பேன் அந்த பெண்ணிடம். அதுவும் நான் பணியாற்றிய என் பாலிடெக்னிக் கல்லூரிக்காக ஒரு வருகைப்பதிவு மென்பொருள் வேண்டி விண்ணப்பித்ததோடு சரி. பிறகு அவங்களை பார்க்கவேயில்லை. நியாபகம் கூட இல்லை. 2004லே நான் இந்த சென்னையில் என் முன்னேற்றத்திற்காக வந்தபிறகு 2005லே தான் திரும்ப பார்த்தேன். புரிஞ்சிட்டிருப்பீங்களே... ஆமாம்... எனது காதல் திருமணம்தான்.

4. வேலைல கொஞ்சம் நுணுக்கமான ஆளுதான், சரியா வர்ற வரைக்கும் விடமாட்டேன். கணிணி அலுவலகங்களுக்கு இருக்கை வசதி செய்து தரும் ஒரு தனியார் அலுவலகத்தில் (அட modular furniture company ங்க) படம்போடறதும் படமாபோட்டத கண்முன்னால நிறுத்திக்காட்றதும் (designing & Project division) தான் என் வேலை.

5. என்னோட அப்பாவ நான் love பண்றது இப்பத்தான்.. ஏன்னா கல்யாணத்துக்கு முன்னால நான் கொஞ்சம் குறும்பு, பிடிவாதக்காரன்.. அதனால அவங்க இடித்துரைக்கறது இந்த மன்னனுக்கு ஏறாது. வேற கெடுப்பான் இல்லாமலும் கெட்டுப்போக இருந்த என்னை சரியான சமயத்துல நல்வழிப்படுத்திகிட்டே வந்திருக்கார்.. அத இப்போதான் நான் உணருரேன். அதேபோல பெரியாரை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்கப்பாதான். (இந்த மாதிரி ஒரு அப்பாவா நான் இருப்பேனானு ஒரு கலக்கம் எனக்குள்ள இருக்கு.)

6. தமிழின் பழக்கம் என் அம்மா சொல்லிக்கொடுத்தது. சின்ன வயசில இருந்தே ஆத்திசூடி, நற்றினை, குறுந்தொகை ன்னு நிறைய சொல்லிக்கொடுத்தது அம்மாதான், ஆமா அவங்க எனக்கு தமிழாசிரியை. ஆனா எனக்கு நாட்டம் அகத்தினைகளில் அதிகம் இருந்ததையும் கண்டுபிடித்து ராமாயணம், மகாபாரதம், பாரதியின் கண்ணன் பாட்டுகள்ன்னு சொல்லிகொடுக்கும்போது ஒவ்வொரு பாத்திரங்களையும் மனோதத்துவரீதியா விளக்கி, எனக்கு character watching சொல்லிக்கொடுத்தது அவங்கதான். (அதனால கூட எனக்கு இயக்குனராகனும்னு ஒரு கனவு இருக்குன்னு சொல்லலாம்). ஆனா அவங்க சொன்னதுல ஒன்னே ஒன்னு நான் செய்யாம விட்டது 8ல சொல்றேன்..

7. ஒரே ஒரு முறை தற்கொலை செய்துக்கிற எண்ணம் எனக்கு வந்தது. அப்போ நான் +2 படிச்சி முடிச்சி விடுமுறையில இருக்கேன். கமல் நடித்த உன்னால் முடியும் தம்பி டிவியில படம் பார்த்துட்டு இருந்தேன்.. அதுல ஜெமினி கணேசன் கமலோட அப்பாவா நடிச்சிருப்பாரு, அவரு ஊருக்கு உழைக்கிற தன்னோட மகன திட்டுவாரு.. ச்சே என்னடா உலகம் இது நல்லது செய்யற இந்த கமலுக்கே இந்த கதின்னா நமக்கு?ன்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல.. ஏன்னா! விளம்பரம் முடிஞ்சி மறுபடியும் படம் போட்டுட்டாங்க.

8. பாட்ஷா படம் வந்தப்ப எங்கம்மா சொன்னாங்க "கண்ணா! அந்த 8டு 8ட்டா மனுச வாழ்வ பிரிச்சிக்கோ"ன்ற பாட்ட நல்லா கவனிச்சு வெச்சிக்கோ.. அதன்படி உன்னோட வாழ்க்கைய plan பண்ணிக்கோ" ன்னு. ஓரளவு தான் பண்ண முடிஞ்சிது.. இத படிக்கிறவங்க யாராவது இப்படி வாழ்ந்துட்டு இருந்தா சொல்லுங்க.. கடைசியா என்ன சொல்றதுன்னா "நேரம்"ன்றது வாழ்ககையில முக்கியம்..

இம்புட்டு நேரம் வெட்டியா எங்கதய கேட்டதுக்கு நீங்க ஏதாவது உருப்படியா செஞ்சிருக்கலாம்னு தோணித்துன்னா அது என்னோட வெற்றி!

(அட உண்ம தாங்க நம்மளபத்தியும் எழுத 8 இருக்குதே!)

நன்றி!


நா கூப்பிட நெனைக்கிற 8 பேரு:

1. நிலவு நண்பன். (இன்னும் 8 துளிகளை சொட்டவும்)
2. சந்திரவதனா.
3. ஜீ.ரா.
4. ஆசிப் மீரான்
5. சூரியகுமார்
6. பிரிய(மான) தோழி
7. நவீன் ப்ரகாஷ்
8. செம்மலர் தியாகு




விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

7 மறுமொழிகள்:

Anonymous said...

நான் ஏற்கனவே இதை முடித்துவிட்டேன்

Chandravathanaa said...

கவிப்பிரியன்
அழைப்புக்கு நன்றி.
சாதனைகள் எதுவும் இல்லாத என்னைப் பற்றி
என்ன எட்டு எழுதுவது என்று தெரியவில்லை.
ஆனாலும் ஏதாவது விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

Chandravathanaa said...

இந்த கமலுக்கே இந்த கதின்னா நமக்கு?ன்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல..

இப்படியும் நினைத்தீர்களா?
நல்லகாலம். செயற் படுத்தவில்லை.

நீங்கள் போய்ச் சேர்ந்திருப்பீர்கள்.
உங்கள் அம்மாவும் அப்பாவும் வாழ்வுள்ளவரை அந்தக் கவலையைச் சுமந்திருப்பார்கள்.
நல்ல காலமாக அந்த எண்ணம் உங்களை விட்டுப் போனது.

ச.பிரேம்குமார் said...

தல, என்னையும் மதிச்சு கூப்பிட்ட ஆட்டத்த தப்பாம ஆடினதுக்கு ரொம்ப நன்றி :-)

உங்க 8 விசயங்களும் அருமை. அதுல உங்க காதல் கதை ரொம்ப சுவாரசியமான சஸ்பென்ஸா வச்சுட்டீங்களே

கவிப்ரியன் said...

நன்றி பிரேம்குமார்.

கவிப்ரியன் said...

//** இந்த கமலுக்கே இந்த கதின்னா நமக்கு?ன்னு நெனச்சுகிட்டு வீட்ல பூச்செடி வளர்றதுக்கு போட வெச்சிருந்த ஊட்டசத்து மாவ கரைச்சு குடிக்கலாம்னு தோணிச்சு.. ஆனா என்னோட ஆச நிறைவேறல..//**

//** இப்படியும் நினைத்தீர்களா?
நல்லகாலம். செயற் படுத்தவில்லை.

நீங்கள் போய்ச் சேர்ந்திருப்பீர்கள்.
உங்கள் அம்மாவும் அப்பாவும் வாழ்வுள்ளவரை அந்தக் கவலையைச் சுமந்திருப்பார்கள்.
நல்ல காலமாக அந்த எண்ணம் உங்களை விட்டுப் போனது. //**

ஹி..ஹி...
அதுலதா என்னோட சோம்பேறித்தனத்த நீங்க புரிஞ்சிக்கனும்.. பின்ன.?? சாவறதவிட டிவி பாக்கறது முக்கியம்னு தோணினதால தானே விளம்பரம் போட்டவுடனே படம் பாக்க ஆரம்பிச்சிட்டேன்..!!

Chandravathanaa said...

உங்கள் அழைப்புக்கு இணங்க எனக்கு எட்டிய எட்டுக்கள்.